M. M. F. Sumaiya - Abdeen Mawatha Daluwakotuwa Kochchikade
"சுக்ரா  சுக்ரா" 
தன் சகோதரனின் அழபை்பை கேட்டு  சுயநினைவிற்கு வருகிறாள் சுக்ரா.
 "ஏன் தங்கச்சி ஒரு மாதிரி இருக்கீங்க?"
"இல்ல நாநா இந்த கல்யாணமும் தட்டுபட்டு பெய்துருமாே என்டு பயமா ஈக்கி"
"அப்பிடி எதுவும் நடக்காது இனிமேலும் அல்லாஹ் எங்கலய சோதிக்க மாட்டான். நாங்க செய்த தவறுக்கு இவ்வளவு நாள் தந்த சோதனகளே அதிகம். அது தான் நாங்க தௌபா சென்ஜி மீண்டுடமே இனி எல்லம் நல்லதா நடக்கும் தைரியமா இருங்க.
                       ♥♥♥
"ஹலோ மச்சான்"
"ஆ  சொல்லுடா ஹம்தி என்ன கத?"
"அது வந்து ஒன்ட ஒருத்தர பத்தி விசாரிக்க தான் போன் பன்னன். ஒங்கட முன் வீட்டு சுக்ராஇருக்காலே ?"
"ஆமா.அவளுக்கு என்ன இப்போ ?"
"இல்லடா நாளக்கி எனக்கு அவள பொண்ணு பாக்க வர போரம் அது தான் அவள பத்தி விசாரிக்கலாம்னு....."
 "டேய் அவள ஒனக்கு கல்யாணம் முடிகிரத சும்மா ஈந்துரலாம்"
"என்னடா  அப்பிடி சொல்ர அவள் நல்லமில்லயா?"
"அவள பத்தி சொல்ரன் அதுக்கப்புரம் ஓன்ட இஷ்டம்".
            ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
"ஹமீத், சுக்ரா சுபஹு கலா ஆக போவுது எழும்பி தொழுங்க"
"சும்மா போங்க உம்மா தொண தொண என்டு காதுல வந்து கத்தி தூக்கத்த கெடுக்காம."
                            ..... .....
"அடேய் ஹமீத் மஃரிபுக்கு அதான் சொல்லுது டி.வி ய ஓப் பண்ணிடு தொழ போடா."
"உம்மா ஒங்களுக்கு வேற வேலயே இல்லயா. சீ இந்த ஊட்ல டி.வி பாக்க சரி நிம்மதி இல்ல தாலெஞ்சி போங்கமா எங்க சரி..""ஓடா நா போன பொரகு வெலங்கும் ஏன்ட அரும."
"மொதல்ல அத செய்ங்க."
                       ..........
"நாநா வர வர இந்த உம்மட அலட்டி தாங்க ஏலாம ஈக்கி. பேசாம வாப்பா மௌதா போனத உம்மா போயிருக்கலாம் நிம்மதியா ஈந்தீக்கும்."
"அது தான் தங்கச்சி எப்ப பாரு அத செய் இத செய்யாத என்டு எதாச்சும்  சொல்லிட்டு.
பழயை காலத்து மனிசி தானே இந்த காலத்து ஸ்டலை் எல்லம் எங்க தெரிய போவுது."

பிள்ளகைளுக்குள் நடக்கும் சம்பாசனையை கேட்ட தாய் சுலைஹாவின் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்தது. தன் உலகமே அவளுக்கு இருண்டது. யாருக்காக கஷ்டப்படுகிறோமோ அவர்களது வாயாலேயே இதனைக் கேட்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.. தன்னை சுதாகரித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்..

"இங்க பாருங்க.. உங்க ரெண்டு பேரையும் வாப்பா இல்லாம வழக்கிறத்திற்கு பட்ட கஷ்டம் எனக்கும் அல்லாஹ்வுக்கும் தான் தெரியும்.. ஒங்கட  நல்லதுக்காக தான் கட்டுப்பாட்டோடு வளர்கிறேனே தவிர உங்கள கஷ்டப்படுத்திறத்துக்காக இல்ல.. இன்டகில்லாட்டி என்டைக்காவது ஒருநாள் புரியும் இந்த உம்மா செஞ்சது சரியென்டு.. 
எந்தத் தாயுமே புள்ளேல் நல்லா வரணும் என்று மட்டும்தான் நினைப்பாங்க.. அத மனசுல வெச்சுக்கோங்க.. 

           ***************
ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து தாய்க்குத் தெரியாம ட்ரிப் போயிட்டாங்க.. இதை அறிந்து மனமுடைந்து இவங்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட கொஞ்ச நாளைக்கு காலியில இருக்கிற   தங்கச்சி வீட்டுக்குப் புறப்பட்டாங்க. விதி அவங்கட வாழ்க்கையில விளையாடிட்டு ..அவங்க போன புகையிரதம் சுனாமியின் அகோர வலையில் அகப்பட்டு அவரது உயிரை காவு கொண்டது.. ஆரம்பத்தில் உம்மா இல்லாம ரொம்ப சந்தோஷமாக இருந்தாங்க. பிறகு அவங்கட வாழ்க்கையே தலைகீழாக மாறிட்டு..
தாயில்லா அருமையை அப்போதுதான் அவங்க உணர்ந்தாங்க..இதுதாண்டா நடந்தது  இதற்குப் பயந்து யாருமே அவளை கல்யாணம் முடிக்க விரும்புறல.. நீ போய் மாட்டிறாத.."

           **************
அடுத்த நாள் மாலை மாப்பிள்ளை வீட்டார் சலாத்துடன் உள்ளே நுழைந்தனர். சிறிது நேர உரையாடலின் பின்னர் மாப்பிள்ளை பெண்ணுடன் தனியாகக்கதைக்க சென்றார்..

" சுக்ரு. இங்க வர முதல் உங்களைப்பற்றி முன் வீட்டுப் பசால்ட விசாரிச்சேன்.."

"அவ்வளோதான்.."
 மனதால் நினைத்தாள்.

"நீங்க ஏதோ அறியாமல் செய்த செயல் உங்கட வாழ்க்கையை நிறையவே பாதிச்சிட்டு.. ஆனா அதெல்லாம் ரியலைஸ் பண்ணிட்டீங்க... ஏன்ட உம்மா இப்ப படுக்கையில் இருக்கிறாங்க. என்னையும் அவங்களையும் பார்த்துக்கொள்ள கூடிய ஒத்தரத்தான் தேடிட்டு இருந் தேன். அதுக்கு நீங்க சம்மதிச்சா???"

சுக்ராவிற்கு இது கனவா நனவா என தெரியவில்லை..

"ஒரு மகளாக ஈந்து என்னால எங்கட உம்மாவை கவனிக்கிற வாய்ப்ப இழந்திட்டன்.. என்ட தாயை பார்க்க ஏலாம போனதுக்கு பதிலா அல்லாஹ் இப்படி ஒரு வாய்ப்பை தருவான் என்று நான் எதிர்பார்க்கல..
இந்த வாய்ப்பை நான் தவற விட மாட்டேன் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே...

M. M. F. Sumaiya
Reg nmbr 37
Abdeen Mawatha
Daluwakotuwa
Kochchikade....