நாம் வளர்ந்தே விட்டாலும்
மனம் என்றும் வளராத குழந்தை தான்.
இழந்ததைக் கண்டு ஏங்குவதில்,
தொலைந்த ஒன்றை தேடுவதில்,
பிடித்த ஒன்றை அடைவதில்,
அடைந்த ஒன்றை தொலைப்பதில்
ஆறுதலுக்காக தாய்மடி தேடுவதில்,
குழந்தைகளிடம் குதூகலிப்பதில்,
நட்புக்களை சீண்டுவதில்,
பிடித்தவரிடம் முரைத்துக் கொள்வதில்,
மனம் இன்னும் வளரா குழந்தை தான்.
பிடிக்காததை தூக்கி எறிவதில்,
ஆத்திரத்தில் கொட்டித் தீர்ப்பதில்,
ஆனந்தத்தில் கண் கலங்குவதில்....
கற்பனைகளை அடுக்குவதில்,
கனவுகளில் வாழ்வதில் மனம் இன்னும் குழந்தை தான்.
பிறருக்கு அறிவுரை கூறுவதில் உள்ள பக்குவம்
தமக்கு நேரும் போது தொலைவதிலும் வெளிப்படுகிறது அதே குழந்தை தனம்.
ஆனாலும் குறையொன்றும் இல்லை.
உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தவும்...
நொடி நொடியாய் ரசித்து வாழ்ந்திடவும்...
அனுபவங்களை பட்டியலிட்டுக் கொள்ளவும்... அக்குழந்தை மனம் கொண்டவர்களால் தான் முடிகிறது.
ரிஸ்னியா ஆப்தீன்
கெலிஓயா
0 Comments