Azka Shareen Nawas (islahi)
Akurana
இயற்கை காற்றையும் சல சலவென ஓடும் அருவிகளின் சப்தத்தையும் காடுமேடுகளினூடாக தஞ்சாவூரை நோக்கி சென்று கொண்டிருந்தரயிலின் ஓர் ஜன்னலருகே இருந்து இயற்கையை ரசித்தவாறே வந்து கொண்டிருந்த மஹ்ரூப் ஹாஜியார் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தார்.
தன் வாழ்வில் தனக்கு இந்த நிலை ஏற்படும் என கனவிலும் நினைக்காத மஹ்ரூப் ஹாஜியார் , தற்போது எல்லோரையும் போன்று ஒரு சாதாரண மனிதனாக நிற்பதை எண்ணி கண் கலங்கியவாறு கடந்த காலத்தை ஒருமுறை மீட்ட ஆரம்பிக்கிறார்.
பணம் , சொத்து, சுகம், வாழ பெரிய பங்களா போன்ற வீடு என ஆடம்பரம் மட்டும் தான் வாழ்க்கை என நினைத்து வாழும் குடும்பம் தான் மஹ்ரூப் ஹாஜியாரின் குடும்பம் . இருந்த போதிலும் பொதுவாக எல்லா குடும்பங்களையும் போன்று அங்கும் சில நிரப்ப வேண்டிய தடயங்கள் இருக்கத்தான் செய்தது.
குடும்பத்தலைவன் மஹ்ருப் ஹாஜியார், மனைவி பிர்தொளஸியா, இன்ஜியர் ஆக டுபாயில் தொழில் புரியும் ஹாஷிர், பாடசாலை படிப்போடு நிறுத்தி விட்டு வீட்டில் இருக்கும் சுலைஹா, வைத்தியராக பணிபுரியும் வீட்டின் கடைக்குட்டி ஆனிஷா இவர்கள் ஐந்த பேரையும் கொண்ட, தஞ்சாவூர் முதலாம் தெருவுக்கே ஆடம்பரம், வசதியான குடும்பம் என பெயர் போன குடுடம்பம் தான் மஹ்ரூப் ஹாஜியாரின் குடும்பம்.
அன்று மஹ்ரூப் ஹாஜியாரின் வீடோ பாட்டும், கூத்தும் கும்மாளமும் என பெரும் சப்த்தங்களோடு நுழைவாயில் முதல் வீடு பூராகவும் மிகவும் அழகாக அலங்கரித்து அந்த தெருவே யிரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு பெரிய விழா நடப்பதை போன்றிருந்தது.எவ்வளவு தான் பாட்டும் கூத்தும் இருர்தாலும் அங்குமோர் சிறகுடைந்த பறவை இருந்தது.
அவள் தான் அசிங்கமானவள், படிப்பறிவில்லாத ஒதவாக்கர என்றெல்லாம் பெயர் வாங்கியவள் தான் சுலைஹா. அவள் அறையின் ஜன்னலினூடே வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் போது தெருவில் இருவர் கதைத்துச் செல்வது இவளது செவிகளில் விழுகிறது.
“அடி... ஹாஜியார் என பெயர வெச்சின்டு இவர்ட குடுடம்பத்துல நடக்குற அநியாயத்த கொஞ்சம் பாரேடி...”
“தாத்தாகாரிய அசிங்கமானவள் என ஓரமா ஒதுக்கி வெச்சிட்டு தங்கச்சிகாரிய கல்யாணம் கட்டி கொடுக்க போராங்களாம்....”
“ இது என்ன அநியாயம்டி....
மகன் இனஜினியர், மகள் டொக்டர் என்ற பெருமையும் ஆடம்பரமும் தான்டி எல்லாத்துக்கும் காரணம்.....பணம் செய்த கோலம்தான்டி அவ்வளவும்.....”
“ பாரே.... அல்லாஹ் எதையும் பொருக்க மாட்டான்..கூடிய சீக்கிரம் இவங்டளுக்கு வார அல்லாஹ்ட சோதனய..”
இதை கேட்ட சுலைஹாவின் கண்களில் வழிந்த கண்ணீர் தரையை தொடும் முன்பே ,
“ அடி நீ இங்க என்ன வாய்பாத்துண்டு ஈக்கிறாய், மாப்புள ஊட்டாக்கள் வார நேரமாகிடிச்சி, குசினிக்கு பெய்த்து ஈக்கிற வேலகள செய்... அதோட இங்க பாரு ... இந்த கண்டிஷன நல்லா கேளு..., மாப்புள ஊட்டாக்கள் வந்ததும் நீ அந்த பக்கம் தல காட்ட கூடாது, எங்க சரி பெய்த்து தொலஞ்சிடு.., அவங்க ஒன்னய கண்டுஇப்படியான ஒரு மொஹரயும் இங்க ஈக்கிதா என நெனச்சாங்க என்டால் எங்களுக்கு தான் கேவலம். இத நல்ல நெனவுல வெச்சிக்கோ புரிஞ்சுதா....!!!” என பிர்தொளஸியா சுலைஹாவை அதட்டி விட்டு,
தங்கச்சிக்காக என விடுமுறை எடுத்து வந்திருக்கும் மகனை,
“ ஹாஷிர்...மகனோவ்... கார் வார மாறி சத்தம் கேக்குது, கொஞ்சம் முன்னுக்கு போய்த்து பாருங்ட வாப்பா...” என்றவாறே தன்னை மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து அலங்கரித்துக் கொண்டு அவளும் வரவேற்பரைக்குச் சென்றாள்.
மற்ற அறையினுள் ஆனிஷாவை “ ஆ..ஆ.. இன்ஜினியர் மாப்புள அப்பிடியே டொக்டர பார்த்து மயங்கிட போறாரு...” என சிலர் கலாய்க்க, இன்னும் சில நண்பிகள் அவளை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த அறைக்கே மஹ்ரூப் ஹாஜியார் கேட்கும் அளவிற்கு கதைத்துக்க கொம்டிருந்தார்.
“ ஆ என்ன புரோக்கர் தம்பி...எல்லாம் சொல்லி இருக்கீங்க தானே மாப்புள வீட்டார்க்கிட்ட என்றாவாறே...” புரோக்கரின் பதிலிற்கு காத்திருக்காமல் அவர் வழமையாக எல்லோரிடமும் பாடும் பல்லவியை பாட ஆரம்பித்தார்.
“ நா பெரிய பணக்காரன், ஏன்ட ஒழப்பு தான் எல்லாத்துக்கும் காரணம், நா சம்பாதிக்க பெய்த்து தான் இவ்வளோ சொத்து,சுகம் எல்லாமே, அதேபோல நா தான் புள்ளகள இன்ஜினியர், டொக்டர் என படிக்க வெச்சேன், என்னால தான் எல்லா நல்ல காரியங்களும் நடந்திக்கி” என இப்படி ஒவ்வொரு பேச்சிலும் அல்லாஹ்வையும் அவனது அருள்களையும் மறந்த நிலையில் பேசினார்.
“ அதோட இங்க பாருங்க மாப்புள இப்பிடி வசதியான குடுடம்பத்துல ஒரு டொக்டர் புள்ளய கல்யாணம் பண்ண குடுத்து வெச்சிக்கோணும்...” என்றவாறே,
“ ஏ..ஏய்.. பிர்தொளஸிறா.. எங்க , மகள வந்து மாப்புள புடிச்சிக்கா என்டு பாக்க சொல்லே...” என அறை கூவல் விட்டார்.
இப்படி தனக்கு இன்னொரு மகள் இருப்பதை அறவே மறந்த நிலையில் அவர்களுடன் கயூகலமாக இரண்டு மணித்தியாலங்களை கழித்து விட்டு சர்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள்.
மாதங்கள் உருண்டோடி ஆனிஷாவின் திருமண நாளும் நெருங்கவே “படிக்காத ஒன்டுட்குமே ஒதவாத இந்த மாட்ட ஊட்ல வெச்சின்டு ஈந்தா நாங்க தான் அவமானப்படனும்...”
“ஆமாங்க, இவள் கொஞ்சம் சரி அழகா, லட்சணமா இருந்தாலும் பரவல்ல..” என பதிலுக்கு பிர்தௌஸியாவும் பேச,
“ ஓ..சரிவராது, நா இப்பவே இவள எங்க சரி கொண்டு பெய்த்து உட்டுட்டு வாரேன்..” என ,
அவள் உம்மா, வாப்பா மீதும் ஒரே ஒரு நானா, ஒரு தங்கச்சி என இரத்த உறவுகள் மீது உயிரயே வைத்து அனைத்து வேலைகளையும் தனது வேலைகளை போன்று செய்பவள், அநதை அனைத்தையுமே மறந்து விட்டு ஒரு மிருகத்தை இழுத்துச் செல்வது போல் காரில் ஏற்றிக் கொண்டு போய் கண்காணாத ஓர் இடத்தில் இறக்கி விட்டு வந்தார் அந்த மஹ்ரூப் ஹாஜியார். அவளோ எதையுமே வெளியில் யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டாள்.
திருமண நாளும் வர சுலைஹாவை தவிர மற்ற அனைவரும் கலந்து கொள்ள இனிதே திருமணமும் நடந்தேறியது.
தன் உறவை இழந்து நிற்கிறோம் என்ற மனக்கவலை துளியும் இல்லாத அந்த கல் நெஞ்சக் குடும்பம், பணமும் மதிப்பும் மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் உயர்ந்த மதிப்பை அடையாலம் என்ற எண்ணம் கொண்ட அவர்களை அல்லாஹ் நினைத்தால் எதனையுள் செய்து விடுவான் என்பது அந்த ஈவிரக்கமற்ற உள்ளங்களுக்கு புரியவே இல்லை.
“ வாப்பா.. நா போக நாளும் சரியாவுது... அதுக்கு முன்னுக்கு சின்ன டிரிப் ஒன்டு பெய்த்துவந்துடுவோம்” என ஹாஷிர் கூற அதே நொடியில் ஆனிஷாவும் அவளின் கணவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் “ ஓ அதுக் கென்த ரெண்டு நாள் டிரிப் ஒன்டு நாளைக்கே பெய்த்து வருவோம்” என்றனர்.
அல்லாஹ்வின் நாட்டம், அவனது ஏற்பாடுகள், அன்று அவர்களுக்கு நடக்க இருக்கும் விபரீதம் எதையுமே அறியாத அந்த ஜீவன்கள் இரண்டு நாள் டிரிப்பை முடித்துக் கொண்டு மூன்றாவது நாள் காலை குதூகலமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அன்று மாலை நேரம் எல்லாரும் தேநீர் அருந்த அமர்ந்திருந்த வேலையில் திடீரென ஏதோ ஒரு பெரிய சப்தம் கேட்கவும் சப்தம் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே “ வாப்பா....” என கூச்சலிட்டவாறு ஆனிஷா ஓடி வரவும் “ என்ன மகள்..” கேட்டுக் கொண்டே எழுந்து செல்ல முனைகையில்....
மறு பதிலாக “ வெளியே ஓ..ங்..க..” என்று ஆனிஷா கூறி முடிக்கும் முன்பே அங்கு எல்லாம் நடந்து முடிந்து பெரும் நிசப்தம் நிலவியது.
சற்று நேரத்திலே அங்கு ஊர் ஜனங்கள் ஒன்று கூட இரண்டு ஆம்ப்யூலன்ஸ் உம் அங்கே 🚨🚨🚨 என்ற சப்தத்துடன் வந்து சேர்ந்தது.
அங்கு ஏற்பட்ட திடீர் மண்சரிவு அசம்பாவிதத்தால் சிக்குண்டு கிடந்த அந்த ஐந்து சடலங்களையும் ஒவ்வொன்றாக அம்ப்யூலன்ஸில் ஏற்றும் போது ஒரு உடம்பில் மட்டும் நாடித்துடிப்பு இருக்கவே,
“ இங்க பாருங்க டாக்டர் தம்பி.... இவருக்கு உசுரு இருக்கிது போல, இவரது நாடித்துடிப்பு இயங்குது எனவே இவரை சற்றும் தாமதிக்காமல் ஏற்றிக் கொண்டு போனால் இவரை மட்டுமாவது காப்பாத்தலாம்...” என்றவாறு மற்ற அம்பயூலன்ஸில் ஏற்ற, அந்த வாகனம் வைத்தியசாலையை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்தது.
யாருமே நினைத்துப் பார்க்காத பேரழிவால் மஹ்ரூப் ஹாஜியாரின் குடும்பத்தின் கதி தலை கீழாக மாறியது.
அன்று தான் அவரது குடும்பத்தை இறுதியாக பார்த்த மஹ்னூப் ஹாஜியார் ஆறு மாதங்கள் தொடர்ந்து வைய்தியசாலையில் நிவாரணம் பெற்று விட்டு,
இப்போது படித்தவர்கள் என கூற மனைவியோ, பிள்ளைகளோ எந்த உறவும் இல்லை, வசதி படைத்தவன், பணக்காரன் எனக் கூற சொத்து சுகமும் இல்லை, அல்லாஹ் தனக்டு எவ்வளவோ அருள்களை தந்திருந்தும் அதனை அவன் தான் எனக்கு என்றோ, அவனது பாதையில் அழகான முறையில் செலவிட்டு, அவன் எனக்களித்திருந்த அருள்களுக்கு நன்றி கூறக் கூடிய ஒரு உண்மை அடியானாகவோ இருக்கவில்லையே என மனம் நொந்தவாறு இனியும் இப்படி இருந்து விடக் கூடாது என, தான் தொலைத்த யன் மகள் சுலைஹாவை பற்றி நினைத்தவாறே, ரயில் நிறுத்தியதும் கூட அறியாமல் ஜன்னலினூடே ஆழ்ந்த சிந்தனையில் வெளியே பார்த்துக் கொண்டிருந்த மஹ்ரூப் ஹாஜியாரை , பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் “ நாநா... ரயில் தஞ்சாவூர் வந்தடஞ்சிட்டு இறங்கல்லயா “ எனவும் தான் சுய நினைவிற்கு வந்தவராக,
“ இனியாவது அல்லாஹ்விற்கு அஞ்சிஅவனது அருள்களுக்கு நன்றி கூறக்கூடிய ஒரு உண்மை அடியானாக வாழ வேண்டும் “ என்ற எண்ணத்துடன் முதலில் தன் மகள் சுலைஹாவை தேட வேண்டும் என்ற நோக்கோடு ரயிலை விட்டு இறங்கி தான் தங்க போகும் வாடகை வீட்டை நோக்கிச் சென்றார்.
021
Azka Shareen Nawas (islahi)
Akurana
0 Comments