Mohamed sareen sawudhun Nisa 
Eattalai, Puttalam.
ஞாலத்தில் பிறந்து -நீ
வேற்றுமை கொண்டு-பல
பிளவுகள் பட்டு 
பிரிந்து ஏன் செல்கிறாய்..

அகிலத்தை ஆழ்பவன்
பாசமில்லா உன்னில்
பாடம் புகட்டத்தான் பாசாங்கு செய்தானோ..?

ஆழ் கடல் மத்தியிலே-தன்
ஆத்திரத்தை கொட்டியவன் 
ஆழிப் பேரலையை 
அனுப்பியும் வைத்தானோ??

சாதி பார்க்காது உயிர் பறித்தான்- நீ அத்தனை
சனங்களை ஒன்றாய் புதைத்திட்டு -மனிதா!
ஒற்றுமை பாடத்தை
ஒன்றாக கற்றிடத்தானே..

சற்று எண்ணிப் பார் மானிடா???அன்று
இனம் ,மதம் பார்த்து நீ
சஞ்ஞலம் கொண்டாயா?? இல்லை
பணக்காரன் ஏழை என பிரித்து தான் வைத்தாயா?
 
சுழற்றியடிக்கும் சூறாவளியை ஏவியவன் உன் சொத்துக்களை சூறையாடி சமத்துவ, சகோதரத்துவ பாடத்தை உணர்த்திட்டான்...

அத்தனை உடல்களும்
அருகருகே புதைத்திட்ட
அந்த நாளை மறந்து-நீ
அகங்காரம் கொண்டதால்
அகங்காரம் அழித்திட
அழிவின்றும் வந்ததே...

கொரோனாவெனும் மகா அரக்கனை அனுப்பி
மனிதாபிமானத்தை புகட்டிட படைத்தவன் நினைத்தானே..

எனினும்
மனசாட்சியின்றி 
இன்றும் நீ பிரிந்து ஏன் செல்கிறாய்???

உன் மனசாட்சியை தூண்டிட
உம்மை சாம்பலாக்கிட
மனிதன் எனும் நாமம்
மலர்ந்திட-நீ ஒற்றுமை பாடம் கற்றிட
மீண்டும் ஓர் பேரழிவு வந்தால் தான் முடியுமா???

📝 Writing by :-
Mohamed sareen sawudhun Nisa
Eattalai, Puttalam.
Rejistration number :-024