Amna Zainab Rishadh
கொரோனாவே
கோடி நன்றி உனக்கு
கூறினாலும் போதாதே. . .
இல்லமதில் ஓர்
இமாம் உருவாகிடக் கண்டேன். . .
குடும்பமது
கூட்டாக இணைந்து
கலந்தாலோசித்திடக் கண்டேன். . .
காலை மாலை வகுப்பென
ஓயாது பம்பரமாய் சுற்றிய
பிஞ்சுகளுக்கு
ஓடியாடிட ஓய்வொன்றுக்
கண்டேன். . .
குறை கூறி
புறம் பேசிடும்
தெருவோர கூட்டங்கள்
குறைந்திடக் கண்டேன். . .
பலஸ்தீனப் பிஞ்சுகள்
நிம்மதியாய் நேன்பு
நோற்றிடக் கண்டேன். . .
தராவீஹிலும்
கியாமுல்லைலிலும்
இல்லங்கள் மஸ்ஜிதாகக்
கண்டேன். . .
தூசு பிடித்து
தூரம் போன
தூய மறையின் ஓசை
வீடெங்கும் ஓங்கி ஒலித்திடக்
கேட்டேன். . .
ஓய்வின்றி
ஓடிக்கொண்டிருந்த உலகம்
இறைநாட்டமின்றி
ஒன்றும் செய்யமுடியாது என
ஓய்ந்துப் போகக்கண்டேன். . .
சீர்கெட்டிருந்த
சமூகத்தை
சீர்திருத்தவந்த சிறுகிருமி நீ
உள்ளங்கள் திருந்தாதவரை
உலகைவிட்டுச் செல்லமாட்டேன்
என்ற உன் போராட்டம்
நியாயம்தான். . .
வரிகள் :
அம்னா ஸைனப் ரிஸாத். . .
-புத்தளம்-
R.No :- 040
0 Comments