Abdhul Latheef Asfa - Puttalam
மானிடா முழு உலகமும் உனக்கு மட்டும் தான் என நினைத்தாயோ??
உன் காலக்கெடுவை எண்ணாமல் பிறருக்கு காலக்கெடு அமைக்க துணிந்தது ஏனடா??
உன்னால் ஆன அற்ப படைப்புகளுக்கே தான் என்ற அகந்தை கொள்ளும் போது...
இறை வல்லமையை சிந்திக்க ஏன் தவருகிறாய்?
அவன் உன்னை தண்டிக்க நினைத்தால் கண் சிமிட்டும் நேரம் கூட அதிகமே...
உன் கைகளுக்கு எப்போது நீ விலங்கிடுகிறாயோ அப்போதே உன் செல்வ வரைபில் வீழ்ச்சியை சந்திக்க தயாராகி விடு...
பஞ்சபூதங்கள் உன்னை சீறிப்பாய்வதும், நோய்கள் உன்னை விடாமல் துரத்துவதும் நீயே கேட்டு பெற்ற வரம்...
பேரழிவுகள் உன்னை வீழ்த்த வந்த ஆயுதங்கள் அல்ல,, உன்னை நீயே அறிய இறைவனால் அனுப்பபட்ட ஆசான்களே.. !!!!
Abdhul Latheef Asfa
Puttalam
Register nmbr :006
0 Comments