S.H.Rashiya Farvin - Polonnaruwa
இயற்கையின் நியதியில்-மனிதனால் கண்டெடுக்கப்பட்ட உயிர்கொல்லிதான் நீ ...
குடும்பமாய் வாழ்ந்த எம்மை- தனிச்
சிறையில் அடைக்க வந்த பாவி நீ...

மண்ணால் படைக்கப்பட்ட எம் மனித
-யினத்தை...மண்ணில் அடக்கம் செய்ய தடைபோட்டது நீ மட்டுமே... 
சாதிமத போர் நடக்காத பாரென்றோ! நீ தலைவிரித்து ஆடுகிறாய்! இம்மண்ணில்..
 
உன் எண்ணம் தவறென்று நீ உணர  ஓராண்டு காலம் போதாதோ!...
 
விஞ்ஞானம் செய்த சாதனையல்ல நீ
இறைவன் தந்த சோதனையே!  நீ...
 
உலவர்குடியின் தற்கொலையை
விடவும்...சாதிமத போரின் உயிர்களை விடவும்..
வாகன விபத்தின் இறப்பினை விடவும்...இளமைக்காதலின் சாவினை விடவும்..
சாதிமத போரின் உயிர்களை விடவும்...கொரோனா சாவு குறைவுதான் இம்மானிலத்தில் ....

கண்கொண்டு பாராத உன்னைக் கண்டு மனிதயினமே!  முற்று
முழுதாய் உனக்கு அடிபணிந்த
மனிதனைக்கண்டு மகிழ்கிறாயோ நீ..

இறைநினைவால் ஜொலிக்கப்பட்ட மாளிகைகள்.. சிலந்தி வலைகளால் மூடபட்டதோ இன்று... உலக முடிவின் அடையாளமே உன்னால் காட்டப்பட்டது.. 
ஆனால்- மானிடமோ! இன்னும் உணரவில்லை போலும்...

நீ கொண்ட ஆட்டத்தால் பலகோடி உயிர்களை இழந்தது இம்மானிலம் 
ஓர்குழியில் பலகோடி ஜடங்களை அடக்கியது நீ செய்த கொடூரம் ...

உனக்கான பரிசோதனைகள் அன்று பிறந்த பாலகனையும் விட்டுவிடவில்லை இன்று ! போதும் உன் கோரத்தாண்டவம்..விட்டுவிடு எம்மை.. 

வந்தவழியே சென்று விடு!.. இன்னும் உனக்கு பலிகொடுக்க எங்களிடம் மீதியென ஏதுமில்லை...சிந்திடும் கண்ணீரைத்தவிர ..

S.H.Rashiya Farvin 
Reg.No:- 004
From:- Polonnaruwa