Nushfa Nisthar - Dehianga
வாழ்க்கை என்பது கடிகாரம் போல...
நீ அதன் செக்கன் முள்ளாய் ஓடுகிறாய் என்றால்...
சவால்களோ உன் நிமிடமுள்ளாய் துரத்தும்
நின்றுவிடாதே!! மணித்தியால முள்தான் உன் சாதனை!

சோதனைகள் உன்னை சூழ்கின்றது என்றால்....
சோர்ந்திடாதே! பாவக்கறை கோரிடுவாய்...
சோதனை உன்னை துரத்தும் போது...
சாதனைதேடி நபிவழியில் சென்றிடு தோழா...

கடிகாரமதில் செக்கன் முள்ளாய் நூஹ் நபி செல்ல...
நிமிடமுள்ளாம் வெள்ளத்தில்,, எதிரிகளை அழித்தான்..
நபிமார்கள் செக்கன் முள்ளாய் சுழன்றனறே அன்று...
நிமிடமுள்ளான ஆதுகூட்டம் பாரிய காற்றால் அழிக்கப்பட
சமூதுகூட்டம் பாரிய இடியால் அழிக்கப்பட்டனரே...
 
மூஸா நபி செக்கன்முள்ளாய் செல்ல..
துரத்திய பிர்அவ்னின் கதி தான் என்ன!

ஈஸா நபி செக்கன்முள்ளாய் செல்ல 
நிமிடமுள்ளாய் துரத்திய எதிரிகளின் பிடிக்கு பலியானது யார் தான்...

அன்று நிகழ்ந்த அட்டூழியங்களுக்கு
பதில் கூற முடியும் என்றால்...
ஏன் இன்று நிகழும் அட்டூழியங்களுக்கு பதில் தர அவனாலா முடியாது!!

குர்ஆனை இழிவாக்கிய மதகுருவே...
கடும் நோய்த்தானோ தமக்கு வந்தது...
குர்ஆனை தீ மூட்டவேண்டும் என்ற மறு நொடியிலே...
புது நோய்கள் பரவ
ஆரம்பித்ததே...

முகம் மூடி மானம் காத்த பெண்களை அன்று...
முகமுடி அணிந்தால் சிறை என்றனர்...
முகமுடி அணியாது (சென்றால்)சிறையென்கின்றனர் இன்று...

அநியாயம் நிகழ்கின்றது என கவலை வேண்டாம்!!
அநியாயத்திற்கு உடனடி தீர்வு காணும் தருணமதில்...

ஈமானின் நிலை குறைந்து இருந்த எம்மை...
சோதனைகளால் ஈமானோ அதிகரித்தது!!

ஈமானில் வீழ்ச்சி கண்ட போது...
சோதனைகளோ ஈமான்தனை எழுச்சி பெறச்செய்தது!!

ஈரமான உள்ளம்தனை... சோதனைகளோ குர்ஆனிய ஒளியால்  உலரச்செய்தது...

ஈவிரக்கமின்றி ஜனாஸாக்களை அக்கினியிட கையொப்பம் கோருகையில் இறைபதில் தனை வேண்டியவளாய்...

ஈடில்லா பாரிய மாற்றமதை மானிட உலகில் மாற்றம் காணச்செய்தது இச்சோதனைகள்!
________________________

Name: Nushfa Nisthar
Village: Dehianga
Register no:026