Safra Binth Makamim - Puttalam
பணத்திற்கு இருக்கும் மரியாதை பண்பானவர்களுக்கு கிடைப்பதில்லை
மனம் இருக்கும் மானிடர்களுக்கு
மனிதாபம் கூட கைக்கொடுப்பதில்லை
கடந்து செல்லும் வாழ்க்கையில் காட்சிகளே மாறும் போது
மனித உள்ளங்கள் மட்டும் நிலைப்பது சாத்தியமோ...??
மாறும் மாய உலகில்
மாடாய் உழைக்கும்
மானிடமே ! சற்று எத்தனித்தால்
மறுமையை சிந்தித்திருந்தால் இன்று ,
இன்று ஏன் அண்டை வீட்டையே தட்ட அஞ்ச போகிறோம்?
ஏன் தெருக்கு ஒரு மஸ்ஜித் இருந்தும் நுழைவாயில்கள் நம்மை அழைக்க மறுக்க போகிறது??
பாவமீட்சிக்கு கரம் ஏந்த மறந்திட்ட
பாவிகளாக பாரினிலே
யாசிக்கும் மனிதா!!
நீர், நெருப்பு, காற்றால் சிக்குண்ட வரலாற்று பக்கங்கள் புரட்டப்பட்டும்
சிதறிய சிதறல்களாய்
திசைமாறி திரியும்
உறவுகளை கண்டிட்டும்
இல் வாழ்க்கைக்கு
இல்லறம் கூட இல்லாமலும்
மனை இருந்தும்
மழையில் கரைந்திட்டும்
வெயிலில் உருகிட்டும்
தவிப்போரை கண்டிட்டும்
இன்றைய நிமிடம் கூட
நமக்கு நிரந்தரமற்றதாய்
மண்ணில் மாய்ந்திட்ட உயிர்களை கண்டிட்டும்
பாவங்கள் குடிக்கொள்ள வேண்டுமோ எம்மில்??
பாவமன்னிப்பிற்கு மன்றாடி நிற்க
கரையாதா மனமே ....??
Safra Binth Makamim
017
From Puttalam
7 Comments
Very nice masha Allah
ReplyDeleteMasha allah
ReplyDeleteNice mashallah
ReplyDeleteMasha allah
ReplyDeleteNice masha allah 😍
ReplyDeleteMasha allah
ReplyDeleteGood masha allah
ReplyDelete