Zuha Binth Mohamed - Sammanthurai 

இறைவா...என் பிஞ்சு
உள்ளம் நொறுங்கிப் போயிற்று....

பிரபஞ்ச பேரிடியாய்
என் சமூகத்தில் சிறகடித்த சந்தோசப் பறவைகளும் சிறகொடிந்து விழ்ந்திற்று....

சீக்கிரமாய் இவ்வுலகையே சீரழிக்கும் சிற்றுயிர் அரக்கனால் அமைதியும் அழிந்திற்று...

சரித்திரத்தில் சந்திக்காத 
இயற்கைச் சரிவுகளும்  சஞ்சலத்தில் ஆற்றிற்று....

உண்டு கொழுத்தவுடலும்
உடுத்து மகிழ்ந்தவுள்ளமும்
உழைப்பின்றி ஊதியமின்றி உருக்குலைந்திற்று
கண்டு களித்த விழியும்
கதைத்து மகிழ்ந்த மொழியும்
கானக தேசத்தினிலே காணலாயிற்று...

பல்கலைக் கனவுகளும்
நன்நிலைக் கல்வியும்
கரைசேரா கப்பலாய் இடைநின்றிற்று
தீன் மறை மார்க்கமும் அதன்
தேன் நிறை வசனங்களும் யதார்த்தம்  உணர்த்திற்று...

இறையில்லமும் இயங்க மறுத்திற்று
இறைநேசர் உள்ளமும்
கலங்கித் துடித்திற்று..

இனவெறி பிடித்த வெறியர்கள் வாழ் 
நாட்டில்; மதவெறி பிடித்த கயவர்கள் 
சூழ் நாட்டில்... மகத்தான மார்க்கத்து மங்கையாய் பிறந்ததனால் என்னுடலும் எரிந்து சாம்பலாயிற்று...

உன் சிறு சினப்பார்வையே
வலித்திடுமே எனக்கு
இத்தனையும்  மொத்தமாக என்னிதயத்தை வாட்டி வதைக்கையில் என்ன செய்வேன்
உணர்த்திடு இறைவா
உன்பால் மீள்வதைவிடுத்து....
என்ன வழிதான் உண்டெனக்கு என்பதையாவது தெரியப்படுத்து...!

Zuha Binth Mohamed
From-Sammanthurai
Register no-013