Rafeeul - ANURADHAPURA
அழகில் விரிந்த இயற்கை மறந்து
அன்பின் அன்னை மடியும் மறந்து
ஆருயிர் உறவுகள் பலவும் கலைந்து
ஆணவம் கொண்டு நீ திரிந்ததேனோ!
இழிவாய் இணையத்தில் நாளும் கரைந்து
இறையை மறந்த இதயங்கள் தானே
ஈடேற்றம் வேண்டி வேண்டுது இன்று
ஈடேறாமல் தவிக்குது நின்று...
உலகே கையேந்தி பாவம் தீர்க்க
உயிர் படைத்த இறையன்பின் விளைவோ
ஊகிக்க முடியா பேரழிவின் தோற்றம். - இல்லை
ஊசலாடும் உலகில் இறைச் சீற்ற சிதைவோ...
எங்கனம் இதனை அறிந்து கொள்வேன்
எப்படி இதனை புரிந்து வாழ்வேன்
ஏராள உயிர்களை அறுவடை செய்து
ஏகவீரமாய் நின்றதும் எத்துனை பேரழிவுகள்...
ஒளி பெறும் மனித நேயம்
ஒற்றுமை காண்பதும் இந்தக் காலம்.
ஓலங்கள் கண்ணீர் காயங்களாகி
ஓயாத ரணங்களாகும் நேரம்...
சுனாமியென்று சூதானமாய் வந்து கொன்றாய்
சூராவளியாகி சுழற்றிச் சென்றாய்
எரிமலை வெடிப்பில் பதர வைத்தாய்
வானிலைகள் மாற்றி சிதர வைத்தாய்...
அத்துனை அழித்து இன்பம் கண்டும்
மனிதன் பாடம் பெறவில்லையென்றோ!
பேரழிவே நீ மீண்டும் தோன்றி வந்தாய்
கொரோனா என நாமம் சூடி வந்தாய்...
இயற்கை சுதந்திரம் கண்டது உன்னால்
காபன் செறிவு குறைந்ததும் உன்னால்
தாய் மடி கொஞ்சம் உணர்ந்ததும் உன்னால் -என
உன்னை வாழ்த்தியதும் மறந்தாயா கொரோனாவே...
மீண்டும் இரண்டாம் அலையென வந்து
உயிர் குடித்துச் செல்லும் சுற்றுலா நியாயமா?
பொருட் சேதம் உன்னால் இல்லை
உயிர்ச் சேதம் உன்னால் தொல்லை.
ஒழுக்கம், சுத்தம், நியாயம் என
பலவும் கற்றுத் தந்தது உண்மை.
மனிதம் இல்லா மானிடம் என்றோ!
மானிடம் மீட்க எம்மோடு தங்கிவிட்டாய்?.
வரித் துளிர்களின் சொந்தக்காரி
Rafeeul 🌷
ANURADHAPURA
12.12.2020
Reg.. no: 053
0 Comments