MSF. SANOOSIYA - PUTTALAM
ஓநாய்களின் ஊளையும் மின்னலை வாரி இறைத்த கங்குள் மேகங்களும் அந்த நடு நிசிக்கு மிரட்டல் விட்டது.
ஆள் அறவமற்ற கந்தர்வக் கோட்டை எதையோ சொல்ல துடிக்க அவளின் முணங்களும்,மௌன மொழி பாஷைகளும் மூங்கில் காடாய் பற்றி எரிய அந்த கந்தர்வ கோட்டை மர்மத்தை உடைக்குமா?
யார் அவள்?
சீழ் வடிந்த அந்த ஆறடிக் கட்டை.
யார் அவன்?
"ஆ ஆ அம்மா வலிக்குது" இரத்தம் சொட்ட சொட்ட உளறினாள் அகல்.
தான் கோணிப் பைக்குள் இருப்பதை உணர அவளுக்கு சில வினாடிகள் எடுத்தது.
"கடவுளே நா எங்க இருக்க ஒன்னும் புரியல"
இதயம் பட படக்க பைக்குள் கையை விட்டு எதையோ துலாவினாள்.
அதிஷ்டவசமாக கையில் சிக்கியது அகலின் (b)பைக் கீ.
அது அவன் அவளை பைக்குள் திணித்த தருணம் எதேச்சையாக அகல் கையோடு வந்தது.
தலையில் பட்ட காயமும் அதை நனைத்த இரத்தமும் அகல் மயங்கியமைக்கான காரணத்தை உணர்த்தியது.
கீயின் உதவியோடு கோணிப் பையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
கண்ணை கசக்கிக் கொண்டு அறையை நோட்டமிட்டாள்.
தன்னை சூழ இரத்த கறைகளும், சுவரை அலங்கரித்த மனித தோல்களும் அவளை வரவேற்றன.
இரத்த வாடை குமட்டிக் கொண்டு வர திறந்து கிடந்த கதவு வழியே அவ்விடத்தை விட்டு ஓட முயல்கையில், ஏதோ ஒன்றின் மீது கால் தடுக்கி விழுகிறாள்.
அது ஒரு சீழ் வடிந்த இடை இடையே புழுக்களுக்கு உணவாகி போன ஒரு ஆண் மகன்.
"அம்மா.........." அலறி அடித்துக் கொண்டு எழும்பினாள்.
"யாரு இவ எங்க இருந்து வந்தா ஒரு வேல இவன் தா என்ன கடத்திட்டு வந்தானா?
உயிரோட இருக்கானானு கூட தெரியலேயே"
நாடித் துடிப்பை பரிசீளித்தாள்.
"பல்ஸ் ரேட்டிங் இருக்கு உயிரோடதா இருக்கா பட் என்ன எதுக்காக கடத்தி இருக்கா?
கான்சியஸ் வர்றதுக்குள்ள இவ கிட்ட இருந்து தப்பிக்க ஒரு வழி தேடியாகனும்"
தப்பிப்பதற்கான துப்பு தேடுகையில் அவள் கண்களில் பட்டது ஒரு டயரி.அதை எடுத்து ஒவ்வொரு பக்கமாக திருப்புகிறாள்.
"அக்னி புரிஜிக்கோ நமக்குள்ள செட் ஆகாது லெட்ஸ் பிரேக் அப்"
"ஏய் என்ன டி ஆச்சு????
ஏ இப்டி பேசுற மாயா????"
"என்ன ஆச்சா????
உனக்கு என்ன ஆச்சுன்னு புரியலயா???
ஒன்னோட மொகத்த பாரு அக்னி"
"அப்போ நீ என்னோட மொகத்த பாத்து தா லவ் பண்ணியா மாயா ?"
"நா ஓ மனச பாத்து தா லவ் பண்றன்னு சொல்றதெல்லா சினிமா டயலாக் ரியல் லைப்க்கு ஒத்து வராது.
உனக்கு வந்து இருக்குற ஸ்கின் டீசீஸ் எனக்கு ஒன்னும் தெரியாம இல்ல"
"வலிக்குது மாயா நீ இப்டி பேசுறது"
"நாளைக்கே ஏ அப்பா அம்மா முன்னாடி இவன் தா நா லவ் பண்ற பைய்யனு இந்த மொகத்தோட இருக்குற உன்ன கொண்டு போய் நிறுத்த முடியுமா?
அப்டியே உன்ன கல்யாணம் பண்ணிகிட்டாலு ஏ பிரண்ட்ஸ்,இந்த சொசைட்டி என்ன ஏத்துகுமா?
இதெல்லா விடு அக்னி. கல்யாணத்துக்கு அப்றம் நீ என்ன தொட்ர ஒவ்வொரு செகண்ட்டும் எனக்கு அருவறுப்பா இருக்கும்"
"எனக்கு வந்து இருக்குற நோய விட ஒன்னோட இந்த வார்த்த என்ன கொல்லுது.
அளவுக்கு அதிகமா பாசம் காட்டுனதும் நீ தா. இப்ப
அளவுக்கு அதிகமா வெறுக்குறதும் நீ தா"
"பிராக்டிகளா யோசி உனக்கு வந்து இருக்குறத நோய் நாளைக்கே எனக்கும் பரவிரும் சோ
ஓ கூட வாழ முடியாது குட் பாய் அக்னி"
"அதுக்கப்றம் மாயாவ பாக்க பல வாட்டி ட்ரை பண்ண அதுக்குள்ள என்னோட நோய் ஏ ஒடம்பு முழுசும் பரவிருச்சு
அவளுக்கு என்ன அடையாளம் கூட தெரியல
அவ என்ன விட்டு போனது வெறியா மாறிருச்சு.
எந்த தோல காரணம் காட்டி அவ என்ன ஒதுக்குனாலோ அதே தோல அவ ஒடம்புல இருந்து உயிரோட உரிச்சு,
ஏ ஆச தீர துடிக்க துடிக்க அவள கொன்ன.
உலகத்துல இருக்குற எல்லா பொண்ணையும் கொன்னு அவங்க தோலால என்னோட கோட்டய அலங்கரிப்ப"
"ஓ ஷிட் மீடியா மொத்தமு தேடிட்டு இருக்குற சைகோ கொலைகாரன் இவன் தானா?"
அடுத்த பக்கத்த திருப்பினாள்.
இது வரை அவன் கொன்று குவித்த பெண்களின் மொத்த விபரமும் அதில் அடங்கி இருந்தது.
அகலின் தாய், தந்தை விபரம் அவள் ஒரு சித்த வைத்தியர் உட்பட
"இவனோட நெக்ஸ்ட் டார்கெட் நா தா பட் இவன பாத்த போலீஸ்க்கு இன்போர்ம் பண்ண தோணல. துரோகம் ஒருத்தன இந்த அளவுக்கு மாத்துமா?"
அவன் அருகில் சென்று தலையை வருடினாள்.
அவள் கண்ணீர் துளி அவன் நெற்றியை நனைத்தது மயக்கத்தில் இருந்த அக்னிக்கு ஒன்றுமே தெரியவில்லை.
அகல் சித்த வைத்தியர் என்பதால் கோட்டைக்கு வெளியே சென்று சில மூலிகைகளை எடுத்து வந்து அரைத்து அவன் மீது தடவினாள்.
அவன் டயரியை எடுத்து ஏதோ எழுதினாள்.
"மாயா பண்ணது தப்பு தான் ஒரு பொண்ணா நா ரொம்ப கவலப் பட்ற.
ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எல்லா பொண்ணுங்களையும் கொல்ல துடிக்குறது தப்பு அக்னி
இந்த சொசைடில
எல்லோரும் அப்படி நோய் வந்தவங்கல ஒதுக்குறது கெடயாது.
நோய் வந்தங்கள ஒதுக்கி வைக்கணும்னா
இங்க எல்லோருமே ஒதுக்கப்பட வேண்டியவங்க தான் பிகோஸ் எல்லோருக்கும் ஒவ்வொரு நோய் இருக்கு.
உங்க நோய குணப்படுத்த முடியாதுன்னு யார் சொன்னது அக்னி?
இப்ப நான் உங்களுக்கு மருந்து போட்டுதா போற
அது உங்களை குணப்படுத்தும்.
டேபில்ல கொஞ்சம் மூலிக வைச்சு இருக்க.
அத தொடர்ந்து பூசுங்க ஒடம்பு ஒரு நாள் பழைய மாதிரி மாறிடும்.
இன்னிக்கு உங்களுக்கு வந்த நோய் நாளைக்கு எனக்கும் வரலாம் சோ புரிஜிக்கோங்க உங்களோட வெறி இன்னு அடங்கலன்னா என்ன வந்து கொல்லுங்க பட் வேற எந்த பொண்ணயு கொல்லாதிங்க
உங்க மனசு மாறனும்னு எதிர்பார்க்கிற."
அகல்
அகல் அவ்விடத்தை விட்டு மறைந்தாள்.
மயக்கம் தெளிந்த அக்னி தன் உடம்பை பார்த்தான்.
உடல் முழுவதும் மூலிகை தடவப்பட்டு இருந்தது.
கோணிப் பை கிழிந்து கிடந்தது அகல் தப்பித்து விட்டாள் என அவனுக்கு மணி அடித்தது.
கோடரியை தூக்கிக் கொண்டு அவளை வேட்டையாட விரைந்தான்.
காலில் தடுக்கு பட்ட திறந்து கிடந்த டயரி ஏதோ சொல்ல வருவதை அறிந்து எடுத்து வாசித்தான்.
அதில் அகல் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் இரும்பு மனதை துரும்பாக்கியது.
கோடரியை கீழே போட்டு தன் நிலை அறிந்து கோட்டை சுவர் அதிர அலறினான்.
"அன்னிக்கு நா தொட்டா அறுவருப்பா இருக்குன்னு சொன்னதும் ஒரு பொண்ணு தா. இன்னைக்கு இந்த சீழ் வடிஞ்ச ஒடம்ப தொட்டு மூலிக தடவினதும் ஒரு பொண்ணு தா" விம்மி விம்மி அழுதான்.
தீண்டாமைக்கு விதை தூவும் மக்கள் மனதில் எழுதப் பட வேண்டிய இருந்தும் எழுதாத கதையே அக்னி
தொற்று நோயால் மட்டுமல்ல எந்தநோயினாலும் எந்த மனிதனும் ஒதுக்கப்படுவதில்லை
ஒரு சில புரிந்துணர்வில்லாத நாய்கள் சமூகத்தில் இருந்தாலும்,
எல்லோரையும் மதிக்கும் மனங்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன .
NAME :- MSF. SANOOSIYA
FROM: PUTTALAM
REGISTER NUMBER:- 032
1 Comments
வாசகர்கள் விரும்பும் வகையில் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை களம் விறு விறுப்பாக நகர்கிறது.
ReplyDeleteSuper👌👌👌👌👌👌