Binth Sattar - Polonnaruwa

           அதிர்ச்சியில் அயர்ந்துவிட்டார் அலாவுதீன்.அவரது இரத்த ஓட்டமே உறைந்து போய்விட்டது எனலாம்.பதறித்துடித்தார்.தாங்கவே முடியவில்லை அவரால்.இறைவா! இறைவா! என்ன சோதனை இது .உஸ்மான் நாநாவுக்கு கொரோனாவா! மரணித்துவிட்டாரா!  அவரால் நம்பவே முடியவில்லை...

அலாவுதீன் பழைய நினைவுகளை வேதனையோடு மீட்டிப்பார்க்கின்றார்........ அலாவுதீனின் தென்னந்தோப்பும் உஸ்மான் நாநாவின் நெற்கானித்துண்டும்  ஒரே எல்லையில் ஒன்றே ஒன்று ஒட்டிக்கிடந்தன.அங்குதான் உருவாகியது பூகம்பம்.உஸ்மான் நாநாவின் நெற்கானியிலிருந்து முற்பது அடி நிலத்துண்டு அலாவுதீனின் தென்னந்தோப்புக்குல் சென்றிருந்தது.அந்த கானித்துண்டை தனக்கு தந்துவிடுமாறு கேட்டு கெஞ்சினார் உஸ்மான் நாநா " நான் திருமணவயதில் நிற்கும் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாக இருக்கின்றேன். ஆண் பிள்ளைகள் இல்லாத என்னால் முன்போன்று ஓடியாடி உழைக்கவும் முடியாது ...வயதும் முதிர்ந்து விட்டது என்றும் தன்னுடைய கானித்துண்டை தனக்கே விட்டுத்தந்துவிடுமாறும்" பல முறை மிகவும் கெஞ்சி மன்றாடினார்  உஸ்மான் நாநா என்னிடம். 

ஆனால் நானோ இரக்கமற்ற அரக்கனாகவே இருந்தேன்.என் கல்மனசோ கரையவுமில்லை , கனியவுமில்லை.கடைசியில் வாக்குவாதம் முற்றி பிரச்சினை பெரிதாகி பொலிசாரிடம் சென்று என்னுடைய தென்னந்தோப்பு கானியில் முற்பது அடி கானித்துண்டை   உஸ்மான் நாநா அபகரிக்க  போகிரார் என அவர்மீது பொய்குற்றத்தை சுமத்தினேன் .பொலிசார் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்தார்கள் . ஐந்து வருடங்களாக காேடும் வீடுமாய் அலைந்தார் உஸ்மான் நாநா.வழக்காட பணமில்லாமல் மிகவும் கஸ்ட்டப்பட்டு  அவரது பிள்ளைகளுக்காக என சேர்த்து வைத்திருந்த கொஞ்சநஞ்ச நகைகளையும் விற்று வழக்காடினார். ஆனால் கடைசிவரை ஏழையான  உஸ்மான் நாநாஏழையான உஸ்மான் நாநாவினால் அவருக்கே சொந்தமான அக்கானித்துண்டை  மீட்டெடுக்கவே முடியவில்லை.இந் நிலையிலயே அவர் கொரோனா எனும் கொடிய தொற்றின் பேரழிவுக்கு ஆழாகி இன்று மரணித்தும் விட்டார்.

இப்பொழுதுதான் உஸ்மான் நாநாவுக்கு செய்த அநியாயத்தை உணர்ந்துகொண்டவராக வருந்துகின்றார் அலாவுதீன்.அவரது மேனி சிலிர்க்கின்றது, உள்ளம் நடுங்குகின்றது, கை, கால்கள் உதரல் எடுக்கின்றது.இன்று உஸ்மான் நாநாவுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை  ஏன்  தனக்கும் ஏற்படாது ? என்று நினைத்து பதறித்துடித்தார் .நான் எவ்வளவு பெரிய அநியாயத்தையும் துரோகத்தையும் உஸ்மான் நாநாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு இறைவா! என இறைவனிடம் கெஞ்சி அழுதார் .

பதறியடித்து தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஓடோடி சென்றார் உஸ்மான் நாநாவின் வீட்டுக்கு.அங்கே அவர்கள் கன்ட காட்சி நெஞ்சை பிளிந்தது , அவர்களது கண்களில் கண்ணீர் வழி்ந்தோடியது.ஏற்கனவே தாயையும் இழந்துவிட்டுருந்த அந்த மூன்று பெண் பிள்ளைகளும் இன்று தந்தையையும் இழந்து யாருமேயில்லாமல்  ஆதரவற்ற அநாதைகளான நிலையில் அனலில் இடப்பட்ட புலுப்போல் துடித்துக்கொண்டிருந்தார்கள்.கதறிக் கதறி அழுது சோர்ந்து சுறுண்டு போய்க்கிடந்தார்கள்.இக்காட்சிகளை எல்லாம் கன்ட அலாவுதீன் அவர்களிடம் அழுது மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.இன்றிலிருந்து நீங்கள் எங்களது பிள்ளைகள் இனி நீங்கள் அநாதைகள் இல்லை என ஆறுதல் வார்தைகள் கூறி அவர்களை அரவனைத்தார்கள்.அத்துடன் அவர்களுக்குரிய அக்கானித்துண்டை அவர்களுக்கே கொடுப்பதாகவும் அந்த மூன்று பிள்ளைகளுக்கும் தானே  திருமணத்தை செய்துவைப்பதாகவும் அவர்களுக்கு சத்தியவாக்கு கொடுத்து இவர்களை அவர்களது வீட்டிற்கே அழைத்து சென்றனர் அலாவுதீனும் அவரது மனைவியும்.

உஸ்மான் நாநாவிற்குஇப்பேரழிவான கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என் வாழ்வின் ஒரு திருப்புமுனையாகும். இந்த கொரோனாவினாலான மரணமே என்னில் மரண பயத்தை ஏற்படுத்தி  நான் செய்த தவறுகளை எனக்கு உணர்த்தியதுடன் என்னை ஒரு நல்ல மனிதனாக்கி எனக்கு ஒரு சிறந்த பாடத்தையும் சொல்லித்தந்திருக்கிறது என்பதுடன் இனிமேல் என் வாழ்வில் யாருக்கும் எவ்வித அநியாயமும் செய்துவிடக்கூடாது இறை நினைவுகளோடு இறைவனுக்கு அஞ்சி வாழ வேன்டும் என்றும் தன் மனதிற்குல் உறுதிபூண்டுக்கொண்டு சென்றார் அலாவுதீன்.

 
Binth Sattar - Polonnaruwa
052