Mac.s.Hamna - Kalpitiya
காலம் காலம் காலத்திற் கேற்ப
மாறும் நேரம் வந்தது Covid  பிறந்தது 
தனிமைப்படுத்தல் கற்றுத்தந்தது செல்போன் மனித கையில் உட்கார்ந்தது 

தொழில்நுட்பம் ஒரு  இடத்தில் குடிகொண்டது சாலை யாவும் முடங்கியது... 

சோலை யாவும் பூத்துக் குலுங்கியது
முகக் கவசம் உயிர்க்கவசமாய் மாறியது
கூடிக் குலாவிய மைதானம் வெறிச்சோடியது... 

இங்கே நான்கு சுவர்களுக்கும் காது வலிக்கின்றது எத்தனையோ வேலைகள் முடக்கப்பட்டு இருந்தாலும் பெண்ணின் வேலை மட்டும் பல மடங்காக அதிகரித்தது... 

நித்தமும் வீதியில் வாகன ஊர்வலமும் சத்தமும் சண்டையும் சச்சரவும் நிறைந்த தெருக்களும் ஓய்ந்து போயின... 

மருத்துவர்களும் தாதி மார்களும் படைவீரர்களும் மனித குலத்தை காக்கும் சக்தி ஆனார்கள்... 

காலத்தால் காலனை வெல்ல முடியுமா? மதியால் விதியை வெல்ல முடியுமா? சோதனையை சாதனையாய் மாற்றுவது இயல்பு மாற்றியமைப்போம்... 

இது வைரசுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான போட்டி ஜெயிப்பதை காலம் தான் பதில் சொல்லும் விடியல் காலம் வரும் வரை காலத்தை காலத்தால் ஜெயிப்போம் கொரோனாவே ஒழிக! 
உயிரினமே ஓங்குக...! 

Mac.s.Hamna
Kalpitiya
Register No. 039