Aroosiya Ilyas - Thalavinna
நடைமுறை பதிவுகள்
கற்றுத்தந்து விட்டன - மனிதம்
கற்று விட முடியாத பல பாடங்களை !!
கற்றுத்தந்து விட்டன - மனிதம்
கற்று விட முடியாத இறை விதியை ..!!
காலமும் கதை பேசும்- குறுங்கதையல்ல !!
காலமெல்லாம் பேச வைத்திடும் நெடுங்கதை !!
காலங்காலமாய் மனிதன் மட்டும் - என்றிருக்க
காலமும் இனி - என்றாகி விட்டது..!!
பணம் பகட்டெல்லாம் பஞ்சாகிட
பிணம் - பேசு பொருளாகி விட்டது !!
பணம் கொண்டோனும்
பிணம் ஆவான் என்பது - மறந்தோருக்கு
நிரூபணம் ஆனது.. !!
இருபது நாள் மழலையை
இறந்து விட்ட மழலையை
இறுதிச்சடங்கேதுமின்றி
இரக்கச்சங்கதியேதுமின்றி
இரையாக்கி விட்டது தீ ..!!
தவறுகள் மட்டுமே - தினந்தோறும்
தவறாது மேடையேறிட - அவற்றை
தவறாது மேடையேற்றுகின்றன
தகவலூடங்கள் !!
அனைத்துமே போலி என்றாகிட
அனைத்திற்கும் வேலியே எமன் என்றாகிட
அனைத்து நற்குணங்களும் கேலி என்றாகிட
அணைத்திட்ட அன்னை அகிலம் - கோபமுற்று
அணைத்து விட்டாள் - பாதுகாப்பினை
அணைத்து விட்டாள் ..!!
அகிலம் அமைதியாய் இருக்குமா ?
அவலம் .. அவலம் .. அவலம்..
அந்தோ பேரழிவுகள் ஆரம்பித்து விட்டன !!
அற்ப மானிடனாகி விட்ட - நம்
அநியாயங்களிற்கெல்லாம் - முடிவுகள்
அண்மித்து விட்டன ...!!
அனுபவித்தாலும் தவறுகளை
அறிந்து உணர்ந்திடுவானா - என்பது
அற்பமான சந்தேகமே..!!
நன்றி..
Aroosiya ilyas
Thalavinna
Rejister no - 033
3 Comments
மலைநாட்டுக் கவியூற்றே.. சித்தரித்த ஆற்றல் சிறப்பாக உள்ளது..
ReplyDeleteமலைநாட்டுக் கவியூற்றே.. சித்தரித்த ஆற்றல் சிறப்பாக உள்ளது..
ReplyDeleteமலைநாட்டுக் கவியூற்றே.. சித்தரித்த ஆற்றல் சிறப்பாக உள்ளது..
ReplyDelete