Fahmidha Hasan - Pulmoddai
களிப்பைத் தரும் தளங்களே
வியப்பை அளிக்கும் களங்களாய்
மாறும் அழிவின் காலகட்டங்களில்
சீறும் அன்பாளனின் இறைநாட்டத்தில்

ஆட்டம் கொள்ளும் மனிதப்பணமும்
வாட்டம் தொங்கும் ஏழைமுகமும்
சமமட்டம் அடையும் தருணம்
ஒரே கட்டடமதின் கீழ்
உயர்மட்ட வெள்ளத்தில் ஒதுங்குகையிலே..

அணு ஆயுதத்தால் அழிக்கும் கொடூர சித்தங்களுக்கு
அணுவளவான வைரஸால் மொத்தமாய்
சரிந்தது உலகப் பொருளாதாரமும்
மரித்துப் போயின பல்லாயிர உடற்கூறுகளும்

பிஞ்சு மழலைகளை வெடிகுண்டால் சிதறடித்து
வேடிக்கை பார்த்த கல்நெஞ்சங்களின்
போக்கை மாற்றிய இறையோனிடமே
காணிக்கையாய் உயிர்ப்பிச்சை கேட்பதும்
நாழிகைகளில் மாறிய பேரழிவுகளிலே..

சுமைப்பொதியாய் நமைச் சுமக்கும் பூமித்தாய்
ஒருகணமதில் ஊமையாய் உள்ளிழுக்கும் தன்வாய்க்குள்
பொம்மையாய் உணர்வற்று அழிவு மெய்யென
வெண்மையாய் மாற நினைக்கும் மனித மெய்கள்

இயற்கையன்னையின் சீற்றங்களும்
இன்றைய வைரஸின் தாக்கமும்
இழையோடுவது நம் ஏற்றங்களுக்கே
இமைப்பொழுதில் மாற்றும் இறையாற்றல்
எம்மிடத்தில் மாற்றம் வர பறைசாற்றுதலாய்..

Fahmidha Hasan
Pulmoddai
REG NO: 029