எங்கள் வாழ்க்கையானது ஒருபோதும் தனது  சுவாரஷ்யத்தை குறைத்துவிடாது. 

எவ்வளவுதான் காயப்பட்டாலும் ,
எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும் ,
எவ்வளவுதான் துரோகம் இழைக்பட்டாலும் ,
எவ்வளவுதான் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் ,
நாம் நேசித்தவர்கள் எங்களை ஏறி மிதித்து கடந்து சென்றிருந்தாலும் எங்கள் நேசம் அந்த ஒரு சம்பவத்தோடு மரணித்திடப்போவதில்லை..

காலம் எமக்கே உரித்தானவர்களை விரைவில் அடையாளப்படுத்திவிடும். சிலரை உறுகி உறுகி நேசித்த போதும் எம் நேசம் அவர்களில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்காது. 

எவ்வளவு துரிதமாக வேதனைகளை அனுபவித்திருந்தாலும் எம் மனதை நெருங்கும் ஒருவரை எப்போதேனும் நேசித்தே ஆக வேண்டும் . எவரோ ஒருவர் எம் வாழ்வில் உண்டாக்கிய தாக்கங்களை எவ்வளவு நாள்தான் எம்மால் சுமக்க முடியும். 

எம்மில் அதிகமானோர்க்கு யார் மீதும் விருப்பம் இல்லாமலோ , எமக்கு பிடித்த ஒருவரை தனது வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்ள ஆர்வம் இல்லாமலோ இருக்காது.
 
பிடித்துப் போன ஒருவரிடம் எம் நேசத்தையும் , ஆசைகளையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சொல்லிக்கொள்ள முடிவதே இல்லை. அவர்களுக்கு எங்களை பிடிக்காமல் போனால் அவரோடு தற்சமயம் இருக்கும் ஒரு சாதாரண உறவும் கூட அற்றுப்போகக் கூடும் என் அச்சமே இதற்குக் காரணம்.

உங்களுக்கு ஒருவரைப் பிடித்துப்போனால் அதை அவரிடம் தைரியமாகச் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ளவும் , நிராகரிக்கவும் போதிய சுதந்திரத்தை அவருக்கு வழங்குங்கள். அவருக்கும் உங்களோடு ஒத்துப்போனால் ஒரு நல்ல உறவாக தொடருங்கள். பிடிக்கவில்லை , எம்மை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும் பட்சத்தில் அழகிய நினைவுகளோடு விடைபெறுங்கள்..

சொல்லியதால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற முடிவை விட , சொல்லாமலும் , சொல்ல முடியாமலும் தொடரும் வலி அதிகமாகத்தான் இருக்கும்..


 INSHAM ALIYAR
 NINTAVUR