உன்னால் முடியும் என்றவர்கள் தான்
வாழ்க்கையில் நீ தோற்றுப் போய்விட்டாய் என்றும் சொல்கிறார்கள்...

உன்னை பிடித்திருக்கிறது என்றவர்கள் தான் 
நீ எனக்கு பொருத்தமில்லை என்றும் சொல்கிறார்கள்...

இதற்கு நீங்கள் காரணமில்லை...
உங்கள் மீது எந்தப்பிழையும் கிடையாது...
அப்போது அவர்களுக்கு சரியாகத் தெரிந்த நீங்கள்,
இப்போது கோணலாகத் தெரிவது அவர்களின் பார்வையில் ஏற்பட்ட குறைபாடு தான்...

சில எதிர்பார்ப்புக்கள் இல்லையென்றாகும் போது 
இப்படித்தான் மாற்றி மாற்றி சிந்திப்பார்கள் போலும்...

பெரும்பாலானோர்
கடந்து வந்த பாதை காயங்களால் ஆனது தான்...

அநேகமானோருக்கு 
ஏமாற்றங்கள்பழக்கப்பட்டுப்போனது தான்...

ஆதலால்,
*யாரிலும் தங்கி நின்றுவிடாதீர்கள்...*
அப்படிப்பட்ட ஒருவர் நீங்களென்றால்,
அவர்களின்றி உங்களால் ஒரு அடி கூட நகரமுடியாது...

புரிந்து கொள்ளுங்கள்...
அவர்கள்  உங்களை நகர்த்திக்கொண்டு தான் இருந்தார்கள்...
இயங்கியது நீங்கள் தான்...

Shafriya Abdul Mutthaliff
Anuradhapura