بسم الله...
சமூகத்தை இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்காகக் கொண்டு சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்த வழி செய்கின்ற ஓர் இணையச் சேவைத்தளம் அல்லது வலைத்தளமாகும்.பெரும்பான்மையான சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்கள் தமது சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றன.
ஒரு பொதுவான சமூக வலைத்தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் சுய விபரங்களையும்,அவரது சமூகப் பிணைப்புக்கள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும்.
பெரும்பாலும் இவை இணையத்தளத்தில் அமைக்கப்பட்டு பயனர்களை மின்னஞ்சல்,
உடனடித் தகவல் சேவைகள் போன்ற இணைய வழியே உறவாட வழிகோலும்.
சில நேரங்களில் இணையச் சமூகச் சேவைகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் சமூக வலைத்தளங்கள் வழமையாக தனி நபர் சார்ந்த சேவையாக இருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள்,இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றன.
பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் முன்னால் பாடசாலை, கல்லூரித் தோழர்களையும் ஒரே பணியில் ஈடுபடும் சகபாடிகளையும், தன் முன்னைய சொந்த பந்தங்களையும் வாழிடம் போன்ற பகுப்புக்களினால் தங்கள் நண்பர்களை அடையாளம் காணக்கூடிய தளங்களாகவும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புக்களையும் கொண்டுள்ளது.
இவற்றில் உலகளாவிய ரீதியில் பரவலான பயன்பாடுகளாக
பேஸ் புக்(fb); முக நூல், டுவிட்டர்(twitter), இன்ஸ்டாகிராம்(instagram), வட்ஸ் அப்(whats app), ஐ எம் ஓ (imo)மற்றும் கூகில்(google) இது போன்றவை உள்ளன.
அன்று
" அன்டா காகஜம் அபூகாஹூகும் திறந்திடு சீசே என்று உதவி தேடிய மானிடர்கள்; இன்று உலகதிசயங்களை தேடித்தருமாறு கூகிலிடம்(google)
கேட்கும் காலமும் வந்து விட்டது.
அது சரி;
வீட்டு வேலையைச் செய்து முடிக்க (H/W)
உதவி செய்ங்க என்று தந்தையிடம் கேட்டா
எனக்கு நேரமில்லை.
அவரு கேட்கிறார் சல்லி கட்டி என்ன படிக்கிற.அவட்ட கேளுங்கிறாரு.
சரின்டு டீச்சர் டீச்சர் என்டு நா போனா
" அட மக்கு எத்தனை முறை சொன்னாலும் உனக்கு விளங்காதாண்டு"
அவ ஏசுரா.
ஆனா அந்த கூகில்(goole) அக்கா எத்துன முறை கேட்டாலும் சலிக்காம சொல்லிக் கொடுக்குறாள்.
தப்பா செய்தாலும் அவங்க மாதிரி ஏச மாட்டிக்கிறாள். இதுக்கு அந்த அக்காவே பரவாயில்லை என்று புலம்புகிறான் ஒருத்தன்.
மீண்டும் மீண்டும் ஒரு பயனர் தன் விவரங்களை பல்வேறு
சேவைகளிலும் பதிவதைத் தவிர்க்கும் வகையில் சீர் தரப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டுக் கணிப்பொன்றின் படி 47 % அமெரிக்கர்கள் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு அராபிய இளவேனில் என அழைக்கப்படும்.
எழுச்சிப் போர்களின் காலத்தில் ஒத்த கருத்துடைய எதிர்ப்பாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை பரப்பிடவும் தங்கள் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் சமூக வலைத்தளங்களையே பெரிதும் பயன்படுத்தினர்.
ஏன் அன்று தமிழகத்தில் ஏற்பட்ட ஜம்பு காஸ்மீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஒருங்கிணைவு சமூக வலைத்தளங்களிலேயே தங்கியிருந்தது.
கண்டி தெல்தெனிய , திகன வன்முறைச் சம்பங்களுக்கு சமூக வலைத்தளங்களே அடிப்படைக் காரணமாகும்.
இன்று சமூக வலைத்தளங்கள் மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது.
உலகில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஒருவர் மற்றவரைத் தெரியாமல் வாழலாம். ஆனால் சமூக வலைத்தலமறியாதிருக்க முடியாது. சமூக வலைத்தளங்கள் முழு உலகத்தையே முடக்கி தன்னுள் அடக்கி தன் கையில் வைத்திருக்கின்றது.
இதனால் மக்களும் அதற்கு அடிமையாகி வாழ்கின்றனர்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று
ஒரு நாள் உலகம் முழுவதிலும் மின் தடை போல் இணையத்தடை நிலவினால் எவ்வாறு இருக்கும்?என்பதை கற்பனை செய்தால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் இக் கற்பனை சமூகத்தில் நம் மனக்கண் முன் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கோபம் மற்றும் எரிச்சலுடன் கையில் ஸ்மார்ட் போனையும்(smart phone),லெப் டாப்பையும்(lap tab)
வைத்துக் கொண்டு ஓரிடத்தில் நில்லாது பித்துப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
இன்று உலகளவில் சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத் தளங்களைப் பயன் படுத்துகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும், இளைஞர்களும் சமூக வலைத் தளங்களை இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம் அது மிக சுதந்திரமாக இருப்பது. எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதும் ஆகும்.
உலக மயமாக்கல் தனித் தனி மனிதர்களாக சுருங்கிப் போய் விட்ட சமூகத்தை சமூக வலைத்தளங்கள் ஒன்றினணக்கின்றன.
இவ் வலைத்தளங்கள் உருவாக்கப் பட்டமைக்கான உண்மைக் காரணம் நபர்களுக்கிடையே சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துவதும், வியாபார முன்னேற்றமும் ஆகும்.
இவ்வாறான தேவைக்காக உருவாக்கப் பட்டவை இன்று மனிதர்களின் மூளையை ஆட்சி செய்து அவர்களது பொழுது போக்குத் தேவையாக மாற்றம் பெற்றுள்ளது.
இன்று வெளிநாடு செல்லும் ஒருவர் முதலில் மனைவியோடு (wife ) ஐ தொடர்பு கொள்ள முன்னர் வைபையோடு
(wifi ) யோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த வலைத்தளங்களில் எந்த அளவிற்கு நன்மை
உள்ளதோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்று நாமிருப்பது இந்தக் கையடக்க உலகத்திற்குள்ளே தான்.
" உலகமே உள்ளங்கையில் உள்ளடங்கி விட்டது."
என பெருமிதம் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் தான் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகியுள்ளோம் என்பதை இன்னும் உணர வில்லை.
சமூக வலைத் தலங்களின் பயன்பாடு என்பது இன்று ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக மாற்றம் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 08 மணி நேரத்திற்கு மேலான நேரத்தை
இவ்வாறான சமூக வலைத் தளங்களில் செலவிடுகின்றனர் என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
இவ்வாறு அடிமையாகியுள்ளவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிப்பது போல் இவை நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் முன்னேற்றமடைந்து வருகின்றன.
இன்று பல குடும்பங்களை உடைக்கவும், உறவுகளை முறிக்கவும்,பல்வேறு பட்ட நோய்கள் ஏற்படவும் முதற்காரணியாக சமூக வலைத்தள பாவணை அமைகிறது.
இன்று முதியவர்களின் கருத்துக்களை கேட்போமேயானால்
" எங்களோடு நேரத்தை கழிக்க எம் பிள்ளைகளுக்கோ, எம் பேரப்பிள்ளைகளுக்கோ நேரமில்லை."
இது அவர்களின் மனக்குமுறல்.
இதனாலேயே நாமும் இணைய நண்பர்களை நாடிச் செல்கிறோம் எண்கிறார்கள்.
அன்று பிள்ளைகள் சேர்ந்து சிற்றில் வீடு கட்டியும், பல்லாங்குழியும் விளையாடினர்.
அதில் வரும் பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொண்டனர்.
இன்று தனிமையில் இனிமை கானும் உலகம் உருவாகியுள்ளதென்பது உண்மை தான்.
தாமாகவே வலைகளில் சிக்கி தப்பிக்க வழி தெறியாது தற் கொலையும் செய்து கொள்கின்றனர்.
ஆசை முத்தம் தா.தா.
என்பது மாறி
அம்மா இங்கே வா.வா.
ஐப்பேட் கொஞ்சம் தா.தா."
என்று மாறிவிட்டது உலகு.
ஆனா ஒரு விஷயம்.
இன்றைக்கு பல் இல்லாமல் வேண்டுமானால் வாழ முடியும். செல் (sell) இல்லாமல் வாழவே முடியாது.
இது உறுதியான உண்மையாகும்.
இன்று உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் விடயங்கள் அறிந்த ஒருவருக்கு குடும்ப நடப்புகளும், தன் அயலவர் பற்றியும் தெரிவதில்லை.
கணவன் மனைவி இருவருமே தமது பெரும்பாலான நேரத்தை சமூக வலைத்தளங்களில்
செலவிடுவதால் அவர்களுக்குள்ளே புரிந்துணர்வைப் பெறவோ, கருத்துப் பரிமாற்றம் அன்பான உரையாடல் போன்றவற்றிற்கு நேரம் கிடைப்பதில்லை.
மேலும் இப் பெற்றோர்களுக்கு தமது மழலைகளின் மொழி கேட்கவோ அல்லது பிஞ்சுகளின் விரல் பற்றி விளையாடவோ ஆர்வம்
எழாது. தம் பெற்றோர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளும் சிறு வயது முதலே இவ் வலைத்தளத்தின் மீது ஆர்வம் கொள்கின்றார்கள்.
தற்போது சமூக வலைத்தளங்கள் ஒவ்வொருவருக்கும் அதிகமான நண்பர்களையும், அதிகளவு அறிவையும் ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான நண்பன் , சுதந்திரம், இரசனை, மன அமைதி போன்ற பலவற்றை தம்மிடமிருந்து பறித்துக்
கொள்கிறது.
கண் சார்ந்த நோய்கள்,
உயர் இரத்த அழுத்தம்,
இதய நரம்பு பாதிப்புக்கள் போன்றனவும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இணையத் தளங்கள் பல்வேறான வசதிகளை அமைத்துத் தந்திருக்கின்றது.
மேலும் கூகில்(google)
பல இலகுவான வழிகளை அமைத்து கட்(cut),கொப்பி(copy ), பேஸ்ட்(paste )
போன்ற வற்றை உருவாக்கி சோம்பேறிகளையும் உருவாக்கி விட்டுள்ளது.
ஆனால் உலகின்மாபெரும் பணக்காரணான
பில்கேட்ஸின் பிள்ளைகளுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
குனிந்த தலைநிமிரா பிள்ளைகளை வளர்த்தெடுங்கள் என்று சொன்னது போய்
தலை நிமிரா சந்ததியினரை வளர்த்துவிட்ட பெருமை எம் சமூக வலைத்தலங்களைச் சாறும். இன்று பிள்ளைகளால் பெற்றோர்களிடம் கூட பேசாமலிருக்க முடியும்.
ஆனால் செல் போனை நோன்டாது இருக்கவே முடியாது எனும் நிலைக்கு மாறியுள்ளது எம் சமூகம்.
இன்று உலகம் உள்ளங்கையில்.
உள்ளங்கையோ வலைத்தளம் கையிலேயே உள்ளது.
அன்று நிலாவைக் காட்டி இன்று யூடியுபை(you tube) ஐ
காட்டி சோற்றைப் பருக்குகிறாள்.பி்ள்ளை எதை சாப்பிடுகிறேன் என்று தெரியாமலேயே
சாப்பிடுகிறது.
இன்று குழந்தைகள் கெட்டுப் போய் விட்டனர் என பலர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
அவர்களுக்கென நேரம் ஒதுக்கியிருந்தால் ஏன் அவர்கள் கெட்டுப் போகிறார்கள்.
இன்று சமூக வலைத்தலங்களில்
பெற்றோர் ஆசையா வைத்த பெயரை மறைத்து விட்டு போலி அடையாளம் தரித்து சுற்றுகிறான்.(fack id).
பிச்சை எடுப்பவன் கூட நீ எவ்வளவு வசூல் செய்தாய் என்று சக நண்பனை விசாரித்துக் கொள்ளுமளவு வளர்ச்சி கண்டுள்ளது.
அன்று விளையாட்டு மைதானங்களில் விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் இன்று ஒன்லைனில் நடைபெறுகிறது.
ஒரு காலமிருந்தது.
வாரம், மாதம் கடந்து வருமாகலாம்.
ஆனால் இன்று??
ஒரு கட்டுரை சொல்லாத செய்தியை ஓர் கார்ட்டூன் சொல்லி விடும்.ஒரு போட்டோ சொல்லி விடும்.
அந்தளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி கண்டுள்ளது.
இன்று வாசிப்பு என்பது மிக மிக அரிதாகி விட்டது.
" ஊடகம் என்பது செய்தித் தாள்களை மறக்கச் செய்தது அல்ல.
ஆனால் என்னவோ செய்திகளைத் திணிக்கச் செய்ய வில்லை."
ஆக்கமும் அழிவும் எம் விரல் நுனிதனிலே உள்ளது.
சமூக வலைத்தளங்களை நாம் அரக்கன் என்று பார்த்தால் அரக்கன்.
அதையே அரசன் என்று பார்த்தால் அரசன்.
பார்வையும்.பயன்பாடுமே.
கவிஞர் கணேசன்
" ஊடகம் என்பது கொட்டிக் கிடக்கும் குப்பை. அதில் நல்லது கெட்டதை பொருக்கி எடுப்பதே மனித பிறவியின் பொறுப்பு."
எனவே ஊடகம் தருவது கணிகளை. அதை நாம் காய் தனில் பறித்திட முயலக் கூடாது.
என்னவென்றால்
இன்று பண்பாடுகள் பறிபோய் விட்டன.
மரண வீட்டிற்கு விசாரிக்க செல்ல மாட்டான். ஆனால் முக நூலில் அவருக்காக துஆ செய்யுமாறு பரிந்துரைப்பான்.
ஆனால் என்னவோ
புன்னகை பற்றிய விசித்திர தகவல்களை சமூக வலைத்தளம் தனில் விட்டிருப்பான்.
அவனுள் புன்னகை என்றோ மரணித்திருக்கும்.
தலைகுனிவதென்னவோ மானிடர் முன். அஜ்னபி மஹ்ரம் வரையரை யல்லாத நண்பர்கள் மட்டும் ஏராளம் வளைத்தளம் தனிலே.
மேலும் சமூக வலைத்தளமானது ஒரு சில மனிதர்களின் உள்ளங்களை புண்படுத்தலாயிற்று.
தனிமனிதனை விமர்சிக்கவும்,
இனப் பிரச்சினை,
நாடுகளுக்கிடையிலான முறுகள் நிலைகளைத் தோற்றி விடலாயிற்று.
ஆனால் இன்று சனநாயகம் நாட்டில் பேணப்பட்டதோ இல்லையோ
சமூக வலைத்தளங்களில் பேணப்படுகிறது.
பணக்காரன் முதல் பாமரன் வரை , ஆண்டான் முதல் அடிமை வரை தன் சுதந்திரமான கருத்துக்களை முன்வைக்கின்றான்.
ஒரு செயல் உருப் பெரும் போது நல்லதும்
கெட்டதும் கலந்திருக்கும்.
அளவிற்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும்.
எனவே அறிவின் கொடையை அறிவு பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை.
மற்றவைகளெல்லாம்
மாறிக்கொண்டே இருப்பவை.
நமக்காக உலகம் காத்திருப்பதில்லை.
உலகத்தோடு ஒட்டி வாழ
வேண்டுமெனில்
சமூக வலைத்தளங்கள்
அளிக்கும் நன்மைகளை ஏற்று,
வாய்ப்புக்களைப் பயன்படுத்தி,
விபரீதங்களிலிருந்து
விலகிக் கொள்வது அவசியமாகும்.
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்."
Faizana Fairooz.
Puludhiwayal.
Islahiyya lac.
No, 003.
0 Comments