M.N.F.Rinosa

From:Kanukattiya

 Register Number:- 036

#கட்டுரை

_ﺍﻟﺴَّــــــــــــﻼﻡُ ﻋَﻠَﻴــْــــــــــﻜُﻢْ ﻭَﺭَﺣْﻤَـــــــــــﺔُ ﺍﻟﻠّٰﻪِ ﻭَﺑَﺮَﻛـَـــــــــــــﺎﺗُﻪ

                  இன்று சமூக வலைத்தளங்களினால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மனிதனே கிடையாது என்று சொல்லுமளவுக்கு  பல பேர் தவறு செய்து வருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குறிய விடயமே! எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அலைந்து திரியும் எம் சமூகம் அதன் மூலம் தமக்கு பிரயோசனம் என்ற விடயத்தை விட வெறும் பாவங்கள் என்ற விடயத்தையே முதன்மைப்படுத்துகின்றனர்.    அன்று  நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்கள் வாழ்ந்த காலங்களில் தீன் எவ்வளவு மேலோங்கி இருந்ததோ அதே போல் இன்றைய காலத்தில் இல்லை என்பது உண்மையே!!   அதற்கு மிகக்காரணம் சமூகவலைத்தளங்கள் என சொன்னால் மிகையாகாது...ஸஹாபாக்களின் காலத்தில் நபி ﷺ அவர்கள்  ஏவிய நல்வழி முறைகளை கொண்டே அவர்களது வாழ்வை அழகிய முறையில்  வாழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் ஆனால்,  இன்றைய நிலையை எடுத்து நோக்குவோமானால் பல்வேறு பட்ட வலைதளங்களின் ஊடாக பல பயனுள்ள தகவல்களை பார்க்கக்கூடியயாக உள்ளது ஆனால், இவை அனைத்தையும் உதறி தள்ளி எது சீர்கேடோ. .. எது பாவமோ எது ஷைத்தானின் வழியோ அதை நோக்கி  செல்லக்கூடியவர்களாக தான்  இன்று வாழ்கிறோம். இதற்கு முழுக் காரணம் சமூகவலைத்தங்களில் ஆபாச படங்கள்,இசை,நாடகம் என்ற இழிவான  செயல்கள் தான் என நான் கருதுவேன். ஏனென்றால்  அல்லாஹ் தன் திருமறையில் வலியுறுத்தி கூறுகிறான் இசையை கேட்பவர்களுக்கு   முனாபிக்களின் இயல்பு வரும் என்று. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நம்மில் பலர் இசையை கேட்டுக் கொண்டு ஆபாச படங்களை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். பார்ப்பது மட்டுமன்றி பல்வேறு வலைத்தளங்களில் பதிவிட்டு பிறரையும் வழி கெடுக்க செய்யும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். 

      நபி ﷺ அவர்கள் அன்று தீனை பரப்பினார்கள் ஆனால் அவர்களின் சமூகம் நாம் அவர் நல்வழியை மறந்து  யார் வழியில் செல்கிறோம் என சிந்திக்கவே வேண்டும்.....  ஒவ்வொரு முஃமீனான முஸ்லீம்கள் மீதும் நன்மையை  ஏவி தீமையை தடுக்கவே இஸ்லாம் மார்க்கம் போதித்துள்ளது  ஆனால்  இன்றைய காலத்தில் தீமையை ஏவுவபர்களாக வாழ்கிறோம்.  சமூக வலைத்தளங்கள் இன்று படும் சீர் குலைந்த சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எமது சமுகமே இவ்வாறு  வழி தவறி செல்கிறதே... வரவிருக்கும் நம் இளைய  சமுதாயத்தின் நிலை என்ன????

 ஏனென்றால்  பெரியவர்களை  பார்த்து தான் அவர்களும் வளர்வார்கள். அது நல்ல வழியோ தவறான வழியோ அது நம் கையிலே..!!! எனவே எம் இளைய சமூதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாக நல்ல விடயங்களை கொண்டு வாழ்ந்தால் மாற்றம் காணலாம்...

இந்த வலயதளங்களின் மூலம் சீர் குலைந்து  தவறான வழியிலே நீங்களும் சென்றால் எம் இளைய சமுதாயம்????? சீர்குலைந்து போகுமே தவிர நேர் வழி அடைய வாய்ப்பில்லை 

அல்லாஹ் பாதுகாப்பானக!!

அல்லாஹ்வின் திருப்தியையும் ஆசிக்கும் உள்ளங்களாக நம் இளைய சமூகம் வளர்க்கப்பட வேண்டும்....

  சிந்திப்போம் சகோதர சகோதரிகளே... 

  ஏன் இவ்வாறான செயல்கள்???

இஸ்லாமிய பண்புகள் மறக்கடிக்கப்பட்ட நிலையில் இன்று வாழ்கிறோம்... பொழுதை கழிக்கிறொம்.... நம் வாழ்க்கையையே வீணடித்து  மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறொம்....

 வாடஸ்அப், இன்டர்நெட், இன்ஸ்டகிராம்,செட்ஸ் என பல்வேறு ஊடகங்களுக்கு அடிமையாகி முகம் தெரியாத ஒவ்வொருவருடனும் தவறான உறவு வைத்து  முகம் தெரியாத நட்பு அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று முழுவதும் அறியாமல்  தெரியாமல் இருந்து ஏமாறுவது. இஸ்லாம் 

 தடுக்கப்பட்டுள்ள உறவுகள். அந்நிய பெண்கள், ஆண்கள் உடன் நட்பு, இப்படி அனைத்து சீர்கேட்டிற்கும் இந்த பல வலைத்தளங்களே  உதவி புரிகிறது.

 இதனாலே

 இன்றைய சமூகம் மிகவும் சீர்குலைந்து  காணப்படுகிறது. இதன் ருசியை அனுபவிப்பதில் இவ்வளவு இன்பம் கானுகிறீர்களே?? சற்று சிந்தியுங்கள்!!! 

 ஒவ்வொரு ஆத்மாவும்  மரணத்தை சுவைத்தே தீரும்...# என அல்லாஹ் தன் திருமறையில் மிகத்தெளிவாக  கூறியுள்ளான்.  இதை சற்றும் பொருட்படுத்தாமல் இந்த துன்யா தான் நிரந்தரம் என்று  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்  இந்த உலகம் என்பது எமக்கு ஒரு சோதனைக்களம் அதை வலயத்தளங்களின் மூலம்  உலகை இன்பமாகவும் , சொர்க்கமாகவும் ஆக்கிக் கொண்டு வாழ்கிறோம்

 *காபிர்களுக்கு இவ்வுலகம் சொர்க்கமே முஃமீன்களுக்கு சிறைச்சாலையே* என்று அல்லாஹ் கூறியுள்ளான்.  ஆனால் இவ்வுலகை சொர்கம் என வாழ்கிறோம்... ஏன்..???

இவ்வுலகை சொர்க்கம்  ஆக்கிக் கொண்டால் அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தை அடைந்து கொள்ள முடியுமா என்பதை சற்று சிந்திக்கக் கூடியவர்களாக நாம் இந்த இடத்தில் இருக்கின்றொம்.  எமக்கு இந்த உலகம் பரீட்சை கலமே இதை நாம் சொர்க்கமாக்கிக் கொண்டால் எவ்வாறு பரீட்சையில் வெற்றியடைந்து முடிவில்லா வாழ்வின் சொர்க்கத்தை அடைந்து கொள்வது என்பதை சிந்தித்து வாழக்கூடியவர்களாக மாறுவோம்... 

இந்த சமூக வலைத்தளங்களின் மூலம்

  மறுமையின் வாழ்வை நரகமாக்கிக் கொள்ள தயாராகுகின்றீர்களா????

நபி ﷺ அவர்கள் காட்டித்தந்த வழியில் செல்லுங்கள்... வலைத்தளங்கள் கூறும் வழியில் அல்ல .... !

இந்த சமூகமும் வறும் எதிர்கால சமூகமும் உங்கள் கையில்........!!!

 _இன்ஷா அல்லாஹ்_

இவ்வண்ணம்

~Allah's queen Rino~