M.N.F.Rinosa - Kanukattiya
முழு உலகையும் சூழ்ந்து அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்றுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இலட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடலாலும் உள்ளத்தாலும் நொந்திருக்கின்றார்கள். தங்கள் தேவைகளைக் கவனிக்கவோ தமது ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை காட்டவோ முடியாத அளவு நோய்த் தொற்று அச்சத்தினால், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்...
தன் அடியார்களை சோதிப்பதற்காக சில நோய்களை அல்லாஹ் இறங்கி வைத்தான். அந்த வகையில் கொரோனா என்ற தொற்று நோய் மிகப்பெரிய பங்காகும்...
அல்லாஹ் விதித்ததை தவிர எதுவும் எம்மை அனுகாது. மேலும் அல்லாஹ் நாடுவதை எவராலும் மாற்ற முடியாது. அல்லஹ்வின் நாட்டப்படி இன்னோயினால் தான் எம் மரணமென்றால் அதை யாராலும் தடுக்க முடியாது.
ஹராம் ஹலால் பேணி சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் இறை விதிப்படி வாழ வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. இன்று இந்த தொற்றினால் வல பிரதேசங்களுக்கு செல்வதை தடுக்குமாறும், இந்நோய் நிலையாகும் வரை தன் ஊரிலேயே இருக்குமாரும் கூறி lock down என்ற பூட்டை போட்டு இருப்பதை காணலாம்.
*"நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி அறிந்து கொண்டால் அதில் இருந்து ஓடாதீர்கள். அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் அறிந்தால் அந்நிலத்திற்கு நுழைய வேண்டாம் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்"* (புகாரி )
இதன் அடிப்படையில் என் நபிகளார் காட்டித் தந்த அழகிய வழி முறையை அறியலாம்... உலகத்தின் சுய இன்பங்களில் மூழ்கிய மனிதர்கள் அல்லாஹ்வை பற்றி, தன் மரணத்தை பற்றி, மறுமை வாழ்வை பற்றியும் நினைப்பமில்லை.
கூத்துக்களிலும் ஆடம்பர மோகத்திலும் முழ்கியிருந்த வேலையில் அனைத்தையும் மறந்து இறைவனின் பக்கம் திரும்பச் செய்து மரணம் பற்றிய பயத்தை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி ஈமானை பலப்படுத்தி பெறும் பாடத்தை புகட்டியுள்ளது கொரோனா என்ற பேரழிவு...... மேலும்,
இக்காலப் பகுதியில் ஏற்படும் இன்னல் துன்பத்தின் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றினைந்து செயப்பட வேண்டும். இதற்கு தனிமையில் இருப்பதை மட்டும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை மாறாக, *அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:பாத்திரங்களை மூடிவையுங்கள்;தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள் ஏனெனில்,ஆண்டின் ஓர் இரவு உண்டு அவ்விரவில் கொள்ளை நோய் இறங்குகிறது மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை”*
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
(நூல்: முஸ்லிம் -4102)*
சுத்தம் ஈமானின் பாதி.. சுத்தம் எமக்கு இஸ்லாம் கறறுத்தந்த பாடம் இக்கால கட்டத்தில் அவற்றை கடைபிடிப்போம்.
மேலும் ' மனிதர்கள் பலவிதமான இழப்புக்கள், துன்பங்கள், இன்னல்கள் நோய்கள் போன்றவற்றைச் சந்திக்கின்றார்கள். இவை, நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வருவதில்லை. என்பதை நாம் இந்த நோயின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும். அழிவுகளும் தாக்கங்களும் அனைவருக்குமே ஏற்படுகின்றன. அதேபோல், வறுமை, நோய், துன்பம் என்பனவும் எத்தகைய பாகுபாடுமின்றி அனைவரையும் அடைகின்றன. ஏன்? அது காபிர் – முஸ்லிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது.
நபிமார்களின் வரலாற்றை ஆராயும் போது, அங்கே அவர்கள் நோய், கஷ்டம், துன்பம், வேதனை போன்றவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள்...
**கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார்*, “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: புகாரி 3474
மேலுள்ள நபி மொழிகள் கொள்ளை நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வையையும் அதனால் பீடிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் பேசுகிகின்றன. தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு வேளை இந்த நோயால் மரணித்துவிட்டால் கூட ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை நிச்சயம் அவர்களுக்குக் கிடைக்கும் என்ற நன்மாராயத்தையும் இந்த இறை செய்திகள் எமக்கு சொல்கின்றன.
“தொற்று நோய் தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும்.. தன் இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். என்பதை உணரந்துள்ளோம்...
தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி கொண்டவராக பொறுமையோடு நம்பிக்கையோடு வாழும் அடியார்களாக இன்று மாறி உள்ளோம்... அதை இக்காலமே எமக்கு உணர்த்தியது... மரண பயத்தால்
அல்லாஹ்வை நெருங்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.....
அல்லாஹ்வே நோயைச் சோதனையாகத் தருபவன் அவற்றை நீக்கி குணப்படுத்துபவனும் அவனே!
எனவே, உலகைப் பீடித்துள்ள இந்த கொடூர கொரோனா வைரஸை பொறுமையோடு உரிய முறையில் எதிர்கொண்டு, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அதிலிருந்து அவனது பாதுகாப்பைப் பெறுவோம்....
~ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்~
●●●●●●●●●●●●●
இவ்வண்ணம்
~Allah's queen Rino~
Register Number:- 036
0 Comments